பதிவு செய்த நாள்
09
ஜன
2020
12:01
தஞ்சாவூர்: திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின், 173வது ஆராதனை விழா, 11ம் தேதி துவங்குகிறது.
தஞ்சாவூர், திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின், 173வது ஆராதனை விழா, 11ம் தேதி துவங்குகிறது. துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு, குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைக்கிறார். தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் வாசன், தலைமை வகிக்கிறார். அன்று மாலை முதல், 14ம் தேதி இரவு, 11:00 மணி வரை, பல்வேறு கர்நாடக சங்கீத கலைஞர், பாடகர்களின் இசை அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் நாள், 15ம் தேதி காலை, 9:00 மணிக்கு, விழா பந்தலில், ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று, பஞ்சரத்தின கீர்த்தனை பாடி, தியாகராஜர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். முன்னதாக, தியாகராஜர் சுவாமிகள் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு, 8:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில், தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சியும், இரவு, 11:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.