திந்திரிணீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2012 11:04
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று காலை 7.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து பிரம்மோற்சவ விழா துவங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. நிகழ்ச்சியில் தொழிலதிபர் ராம்டெக்ஸ் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், உற்சவதாரர்கள், அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி குழுவினரும் செய்து வருகின்றனர்.