வானமாமலை கோயிலில் வரும் 3ம் தேதி சித்திரை தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2012 10:04
திருநெல்வேலி:நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வரும் 3ம் தேதி சித்திரை தேரோட்டம் நடக்கிறது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் சித்திரை தேரோட்டம் வரும் 3ம் தேதி நடக்கிறது. இதைமுன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் நான்குநேரி தனலட்சுமி கல்யாண மண்டபத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை அன்னதானம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் தரிசனம் பெற்று முதன்முதலாக நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி அன்னதான கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஏற்பாடுகளை பக்தர்கள் அன்னதான கமிட்டியினர் செய்துவருகின்றனர்.