ஆழ்வார்குறிச்சி:பாப்பான்குளம் ராமசாமி கோயிலில் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பாப்பான்குளத்தில் ஊரின் மையப்பகுதியில் ராமசாமி கோயில் உள்ளது. இங்கு ராமர், சீதை, லெட்சுமணன், ஆஞ்சநேயர் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். கடையம் வட்டாரத்தில் ராமர் கோயிலில் தேர் திருவிழா நடப்பது பாப்பான்குளத்தில் மட்டும் தான். பாப்பான்குளத்தில் சித்திரை தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் மே 5ம் தேதி அதிகாலையில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் கேடயத்தில் தேருக்கு எழுந்தருளுகின்றனர். பின்னர் தேரோட்டம் நடக்கிறது.