Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாதா அமிர்தானந்தமயி நாளை மதுரை வருகை சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா: 100 சிசிடிவி அமைக்க உத்தரவு சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா: 100 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 221 வது உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 221 வது உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
01:01

சென்னை: தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற 26.01.2020, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணியளவில் சென்னை, புரசைவாக்கம் பகுதி மக்களிடையே திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடைசூழ.... திருக்கோயில்களின் தூய்மை -நலன் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருவீதிவுலா வருவதுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகளையும் நடுகிறது.

இதை தொடர்ந்து இந்த இறைபணிமன்றம் காலை 10 மணியளவில் அருள்தரும் ஸ்ரீ பங்கஜம் அம்பாள் உடனாகிய அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயிலில்
தனது 221 வது உழவாரப்பணியை செவ்வனே செய்கிறது.
 
விழிப்புணர்வின் அவசியங்கள்

* திருக்கோயில்தோறும் தூய்மையாக வைத்திருத்தல் (உழவாரப்பணி)
* திருக்கோயில்களை நமது இல்லமாக பாவித்து தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், திருக்கோயில் வளர்ச்சி, வருமானம் மூலமாக, பின்வரும் தேவைகளுக்கு வழி செய்தல்.
* திருக்குளம் பராமரிப்பு - திருக்குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல்
* திருக்கோயில்களில் சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல்.
* திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா செல்ல ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் சுவாமி திருத்தேர் செய்து பவனி வர ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் கோசாலை பாதுகாத்து தொடர்ந்து பராமரித்தல்.
* திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், தங்குமிடம், அன்னதான கூடம், கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு
* திருக்கோயில்தோறும் அப்பகுதிவாழ் சிறார்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு,
* திருக்கோயில்தோறும் ஆகம விதி பின்பற்றுதல், புராதானம் மாறாமல் காப்பது.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வலியுணர்த்தும் வகையில் அவர்களாகவே முன்வந்து திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதே மன்ற அடியார்களின் தலையாய கடமையாகும். விழிப்புணர்வு மூலம் உழவாரப் பணி செய்யும் திருக்கோயில்கள்தோறும் குறைந்தது 50 அடியார் பெருமக்களையாவது அத்திருக்கோயிலில் நிரந்தரமாக தொண்டு செய்வதற்கு உருவாக்குவதே ஆகும்.

தொடர்புக்கு:
எஸ். கணேசன்  9840 123 866
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாகராஜ் ; இந்தியாவின் ஒற்றுமையின் அடையாளமானதும், சனாதனத்தின் பெருமையானதுமான மகா கும்பமேளா 2025, ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) நேற்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் அவரது அவதார ஸ்தலமான நந்தவனத்தின் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தையொட்டி, புதிய கொடிமரம் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது, கீழானுார் கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar