மதுரை : மதுரை பசுமலை அமிர்தானந்தமயி மடத்தில் நாளை (ஜன., 23) மற்றும் நாளை மறுநாள் (ஜன. 24) நடக்கும் ஆன்மிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாதா அமிர்தானந்தமயி பங்கேற்கிறார். பிரம்மஸ்தான ஆலயத்தின் 24ம் ஆண்டு விழாவை முன்னிட்டு மடத்திற்கு வருகை தரும் அவர் இரண்டு நாட்களிலும் காலை 11:00 மணி முதல் நடக்கும் சத்சங்கம், பஜனை, தியானம், தரிசன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். இதில் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்கலாம்.