Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீஷ்மாஷ்டமி வழிபடும் முறையும் ... நாளை இதை படித்தால் ஏழு ஜன்ம பாவம் தீரும்! நாளை இதை படித்தால் ஏழு ஜன்ம பாவம் ...
முதல் பக்கம் » ரத சப்தமி 2020
எருக்க இலைகளுக்கு ஏன் இத்தனை மதிப்பு?
எழுத்தின் அளவு:
எருக்க இலைகளுக்கு ஏன் இத்தனை மதிப்பு?

பதிவு செய்த நாள்

31 ஜன
2020
03:01

அர்க்கன் என்றால் சூரியன் என்று அர்த்தம்.  அர்க்க இலைகள் என்பதே எருக்க இலைகள் என்று மாறிவிட்டது. சூரியனின் கிரணங்களை தன்பால் இழுத்துக் கொண்டு நல்ல தன்மை உள்ள கதிர்களையே நமது உடலில் பாயச் செய்யும் தன்மை எருக்க இலைகளுக்கு உண்டு. அதனால்தான் அவை சிறப்பாகக் கருதப்படுகின்றன. ரத சப்தமி அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து எருக்க இலைகளை தலை மற்றும் தோளில் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் என்றால் அதில் குங்குமமும் அட்சதையும் வைக்க வேண்டும்; ஆண்கள் என்றால் அட்சதை மாத்திரமோ அல்லது விபூதியும் அட்சதையோ வைக்க வேண்டும். நீராடும் முன் இவ்விலைகளை வைத்த பின் சற்று நேரம் சூரியக் கதிர்கள் அதன் மேல் விழும்படி நிற்க வேண்டும். பிறகு தலையில் தண்ணீர் ஊற்றி நீராடலாம்.

பிறகு வெல்லமும் நெய்யும் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யவேண்டும். ஆதித்யனுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கலை சூடு ஆறுமுன் நிவேதனம் செய்துவிட வேண்டும். பிறகு ஆதித்ய ஹிருதயம் அல்லது தெரிந்த சூரியத் துதிகளைச் சொல்லி வணங்கலாம். குறைந்தது பத்து நிமிடமாவது அதிகாலை சூரிய ஒளி நம் மீது படரும்படி நிற்க வேண்டும். அன்று முழுவதும் பால், தயிர் போன்ற பொருட்களை உண்ணாமல் சர்க்கரைப் பொங்கல், கோதுமை தோசை போன்றவற்றை உண்டு விரதமிருக்க வேண்டும். மறுநாளும் அதிகாலையில் எழுந்து நீராடி விரதத்தை முடிக்கும் அறிகுறியாக பால் அருந்த வேண்டும். பின்னர் சூரியனுக்கு அர்க்கியம் எனப்படும் நீரை மூன்று முறை விடவேண்டும் பின்னர் பீஷ்மரை நினைத்து மூன்று முறை விட வேண்டும். இது முடிந்த பின் வழக்கமாக உண்ணும் உணவை எடுத்துக் கொள்ளலாம். இவ்விரதம் அனுஷ்டிப்பதால் ஆரோக்யமும், ஆனந்தமும் கூடும்.

 
மேலும் ரத சப்தமி 2020 »
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் ... மேலும்
 
temple news
ஸப்தி ப்ரியே தேவி ஸ்பத லோகைக பூஜிதேஸ்பத ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸ்பதமி ஸத்வரம்!எனும் துதியை ரத சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar