Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமேஸ்வரம் கோயில் வீதியில் ரூ. 14 ... தொடர் விடுமுறை;  திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில்  குவிந்த பக்தர்கள் தொடர் விடுமுறை; திருநள்ளாறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 மே
2024
05:05

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது. சித்திரை மாதம் பின் பகுதியில், அக்னி நட்சத்திரம் துவங்கும். இக்காலத்தை, ஆகம நூல்களில், தோஷகாலம் என்பர். மேலும், நெருப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் வீட்டில், சூரியன் இருக்கும் காலம், அக்னி நட்சத்திர காலம். இக்காலத்தில் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் உள்ள இறைவனை குளிர்விக்க, கர்ப்ப கிரகங்களில் தண்ணீர் கட்டுதல், தாராபிஷேகம் போன்றவை நடக்கும்.

அபிஷேகத்திற்கான பொருட்கள்: அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொறுத்தப்பட்டது. உச்சிகால அபிஷேகம் காலை, 11.30 மணிக்கு முடிந்த பின், தாரா அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடக்கும். அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில் மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது. (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar