உடுமலை:உடுமலை, நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், பூமீ நீளா நாயகி சமேத சவுந்திரராஜ பெருமாளுக்கு, கடந்த மாதம் 30ம் தேதி வாசுதேவ புண்யாகத்துடன் லட்சார்ச்சனை துவங்கியது. தொடர்ந்து, அக்னி பிரதிஷ்டை ேஹாமம் நடந்தது.மறுநாள், காலையில், பஞ்சோபநிஷத் மூலமந்திர ேஹாமம் மற்றும் மாலையில் மீண்டும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடந்தது. இரவில் தத்வ நியாஸ ேஹாமம் மற்றும் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. நேற்றுமுன்தினம் லட்சார்ச்சனை நிறைவு செய்யப்பட்டு, பெருமாளுக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.