பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே எல்.ஆர்.ஜி.,நகர் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், கலச பூஜை, யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 108 மூலிகை திரவியங்களால் பூஜை, மூல மந்திரம், காயத்ரி மந்திரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் கால, மூன்று மற்றும் நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.