Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை முத்தாலம்மன் கோயிலில் திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி காவடிக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி காவடிக்கு சிங்கம்புணரியில் வரவேற்பு

பதிவு செய்த நாள்

04 பிப்
2020
10:02

சிங்கம்புணரி:சிங்கம்புணரி வழியாக பழநிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தை பூசத்திற்கு பழநிக்கு பாதயாத்திரையாக செல்ல, சிங்கம்புணரி சுற்றுப்பகுதி கிராம பக்தர்கள் மாலை அணிந்து கடந்த ஒரு மாதமாக விரதமிருந்தனர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி,ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல திசைகளிலிருந்தும் சிங்கம்புணரிக்கு கடந்த சில நாட்களாக வந்து,அங்கிருந்து பழநிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.நேற்று காலை நகரத்தார் அரண்மனை பொங்கல் காவடி, தேவகோட்டை மற்றும் காரைக்குடி நகரத்தார் காவடி மற்றும் மாட்டு வண்டியில் வைரவேலுடன் சேவுகப்பெருமாள் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனுார், புதுவயல் உள்ளிட்ட செட்டிநாடு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 400 ஆண்டுகளாக நடைபயணமாக காவடி எடுத்து வருகின்றனர். நேற்று சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு சர்க்கரை காவடி, விபூதி காவடி, மயில்காவடி என 365 காவடிகள் வந்தன. அங்கு மூலவருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. சிங்கம்புணரி கிராமத்தார், வர்த்தகர், பொது மக்கள் சார்பில் பல இடங்களில் காவடிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம்,மருத்துவ வசதி செய்யப்பட்டது

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar