மானாமதுரை: மானாமதுரையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றன. வழிவிடு முருகன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருக பெருமானை வழிபட்டனர். மாலை முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்தனர். ஆனந்தவல்லி அம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், கால்பிரவு முருகன் கோயில், இடைக்காட்டூர் பாலசுப்பிரமணியன் கோயில் உள்பட பல முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது.