பதிவு செய்த நாள்
17
பிப்
2020
12:02
புதுச்சேரி : நற்செயல்கள் செய்வதற்கான சக்தியை, நாம் ராஜயோக தியானத்தின் மூலம் அடையலாம் என, பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலைய சகோதரி கவிதா பேசினார்.
புதுச்சேரி பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பாக, 84வது சிவ ஜெயந்தி விழா நடந்தது. வேதாஷ்ரம குருகுலத்தை சார்ந்த கல்யாண ராஜா சாஸ்திரிகள், கவுரி சங்கர் சாஸ்திரிகள், வக்கீல் லோகநாதன் ஆகியோர் சிவ ஜெயந்தி விழாவை துவக்கி வைத்தனர்.பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலைய பொறுப்பாளர் சகோதரி கவிதா பேசியதாவது: தற்போது உலகம் கோபம், காமம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றில் மூழ்கியிருக்கிறது. இதிலிருந்து விடுபட சிவ தந்தை கொடுக்கும் ஞானத்தின் மூலம், நம்முடைய மூன்றாவது கண்ணை திறந்து, ஞானத்தின் அடிப்படையில் எப் பொழுதும் நற்செயல்கள் செய்யும் பொழுது, நாம் அமைதி, சுகம் ஆகியவற்றை அடையப்பெறலாம். கலியுகத்தில் இருந்தாலும் நற்செயல்கள் செய்வதற்கான சக்தியை, நாம் ராஜயோக தியானத்தின் மூலம் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.