இளையான்குடி:பகைவரைவென்றான் கிராமத்தில் கூத்தபெருமாள் கோயிலில் அமைந்துள்ள முத்துமாரியம்மனுக்கு சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடத்தும் மக்கள் முளைப்பாரி வைத்து தினமும் இரவு பெண்கள் கும்மி பாட்டு பாடி வந்தனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் கரைத்தனர்.