புதுச்சேரி : வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு வந்த கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆந்திர மாநிலம், பெனுகொண்டா ஊரில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மனின் பிறந்த ஊரில் உள்ள கோவிலில் பொருத்துவதற்காக, கோபுர கலசம் செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் கரிகோல ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.இந்த கோபுர கலசம் நேற்று புதுச்சேரி வந்தது. காந்தி வீதியில் உள்ள வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் சிறப்பு ஹோமம், தம்பதி பூஜை, குங்குமம் அர்ச்சணை நடந்தது.