பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
பென்னாகரம்: பென்னாகரம் அருகே, கோடராம்பட்டி, வீரபத்திர சுவாமி தேர்திருவிழா நேற்று மாலை நடந்தது. இதில், 10 ஊரைச்சேர்ந்த மக்கள் சேர்ந்து, தேரை வடம்பிடித்து இழுத்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட கோடரம்பட்டியில் உள்ள வீரபத்திர சுவாமி திருவிழா கடந்த, மூன்று நாட்களாக நடந்தது. பொச்சாரம்பட்டி, கோடாரம்பட்டி, நாகனூர், ஜங்கமைனூர், மந்தமேடு, மல்லாபுரம், ரங்காபுரம் உள்பட, 10 ஊரை சேர்ந்த மக்கள் சேர்ந்து இத்திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று காலை தீ மிதி விழா நடந்தது. தொடர்ந்து மாலை, 3:00 மணிக்கு தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். திருவிழாவை காண, சுற்றுவட்டார பல்வேறு கிராமங்கலிருந்து ஏராளமானோர் குவிந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, பென்னாகரம் போலீஸ் எஸ்.ஐ., மாரி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.