பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, மருக்காரன்பட்டியில் உள்ள முனியப்ப சுவாமி கோவிலில், நூதன ஆலய கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த, 29 இரவு, 10:30 மணிக்கு, கிராம சாந்தி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, கும்ப அலங்காரம், முதல்கால யாகவேள்வி உள்ளிட்டவை நடந்தன. அன்றிரவு, 9:00 மணிக்கு, சுவாமி நிலை நிறுத்துதல் நடந்தது. நேற்று காலை, 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, மூலமந்திர ஹோமம், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடந்தன. காலை, 6:45 மணிக்கு மேல், இக்கோவில் முனியப்ப சுவாமிக்கு, நூதன ஆலய கும்பாபிஷேக விழா மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. 8:00 மணிக்கு மேல், இக்கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.