பதிவு செய்த நாள்
03
மார்
2020
10:03
ஈரோடு: கோபி அருகே, வெள்ளாங்கோயில், வேப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 6ல் நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, 5ம் தேதி காலை, 7:00 மணிக்கு தீர்த்த புறப்பாடு, முளைப்பாலிகை மாற்றுதல், தீர்த்தம் கொண்டு வருதல் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, வேள்வி வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன. இரவு, 8:00 மணிக்கு முதற்கால வேள்வி, எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. 6ம் தேதி காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, திருக்குடங்கள் ஞான உலாவை தொடர்ந்து, காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. விழாவில் பங்குபெற வரும் பக்தர்கள், பாரம்பரிய உடையணிந்து வர, விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.