கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில் ஐம்பெரும் விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத்தில் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் வருடாபிஷேகம், சங்காபிஷேகம், சனி பிரதோஷம், நடராஜர் அபிஷேகம், மாசிமகம் தீர்த்தவாரி ஆகியன நடத்தப்பட்டது. நேற்று மாலை, சிவன், அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரி தெப்பகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பழையஜெயங்கொண்டம் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.