கரூர்: கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில், சாலை கற்பக விநாயகர் கோவிலில், நேற்று மகா சண்டி ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:00 மணி முதல், 10:00 மணி வரை மகா கணபதி ஹோமம், மகாசங்கல்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து நேற்று காலை, 7:00 மணி முதல் கோ- பூஜை, கடம் புறப்பாடு மற்றம் மகா சண்டி ஹோமம் நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், தான்தோன்றிமலை நகராட்சி முன்னாள் தலைவர் ரவி, வர்த்தகர் சங்க தலைவர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.