ஸ்ரீவி., பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2020 11:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 6:05 மணிக்கு மாரியம்மன்கோயில் தெரு பொதுசாவடியிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக கொடி கொண்டு வரப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய காலை 8:25 மணிக்கு அர்ச்சகர்கள் ஹரிஹரன், சுந்தர் கொடி ஏற்றினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் காலை 10:00 மணிக்கு அம்மன் மண்டபம் எழுந்தருளல், இரவு 10:00 மணிக்கு வீதி உலா, ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன.மார்ச் 23 பகல் 1:45 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி துவங்குகிறது. திருநெல்வேலி, மதுரை, தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிக்கின்றனர். மார்ச் 24 காலை 11:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.