ஆர்.கே.பேட்டை:சுந்தரவல்லி உடனுறை சுந்தரேசனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று அதிகாலை நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், சாந்தமலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது சுந்தரவல்லி உடனுறை சுந்தரேசனார் கோவில்.ஓராண்டு காலமாக கட்டப்பட்டு வந்த கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று, அதிகாலை, 5:00 மணியளவில் நடந்தது.இதற்கான யாகசாலை பூஜை, கடந்த புதன்கிழமை துவங்கியது. நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில், அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, விநாயகபுரம், கே.பி.என்.கண்டிகை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.