திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமாவாசை தின விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2026 11:03
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி மாத அமாவாசை தினவிழா நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரங்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான முருகபக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.