கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.