பதிவு செய்த நாள்
16
மார்
2020
10:03
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, பொதட்டூர்பேட்டை, திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.நேற்று, காலை, 10:00 மணியளவில், கோவில் வளாகத்தில் தெருக்கூத்து கலைஞர்கள் பதினெட்டாம் போர்க்கள நிகழ்ச்சியை நடத்தினர். இதில், பீமசேனன், துரியோதனனை வெற்றி கொண்டார். இதையடுத்து, கவுரவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.திரவுபதியம்மன் தனது சபதத்தை நிறைவேற்றினார். இதையடுத்து, மாலை, 6:00 மணியளவில், திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில் பிரவேசம் செய்தார். உடன் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்களும் தீ மிதித்தனர்.இன்று, காலை தர்மராஜா பட்டாபிஷேகத்துடன், திருவிழா நிறைவு பெறுகிறது.