பதிவு செய்த நாள்
07
மே
2012
10:05
ஊத்துக்கோட்டை:சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, அம்மன் கோவில்களில் நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மரகதாம்பிகை தாயாருக்கு, சித்திரை மாத பவுர்ணமி விழாவை ஒட்டி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், ஊத்துக்கோட்டை அடுத்த, தாசுகுப்பம் சென்னேரி ஸ்ரீதேவி கிருஷ்ண மாரியம்மன் கோவிலில், பவுர்ணமி விழாவை ஒட்டி, 3ம் தேதி காலை கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள், 4ம் தேதி காலை, 6 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜை, யாக பூஜை நடந்தது.சனிக்கிழமை மாலை, 5 மணிக்கு யாக பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 6 மணிக்கு அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, சுமங்கலிகள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும், கோலாகலமாக நடந்தன.