காட்பாடி: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா காசிக்குட்டை கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கோவில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை, அப்பகுதி மக்கள் பார்க்கும்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் திருட்டு போயிருந்தது. அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகிகள், விருதம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.