சோழவந்தான் காளியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2026 12:09
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, அழகு குத்தி ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பால்குடம், பறவை காவடி, கரும்புத் தொட்டில் கட்டி என ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வைகை ஆற்றிற்கு சென்று கரகம் எடுத்து வருதல் மற்றும் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். மேலக்கால் ஊராட்சி சார்பில் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.