கோவை: ஈஷா யோகா நிறுவனர் சத்குரு, தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் அனைவருக்கும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த தமிழ் புத்தாண்டு நாளில், வைரஸ் என்ற ரூபத்தில் ஒரு கொடிய நோய் தொற்று மகத்தான சவாலாக நம் முன் நிற்கிறது. நாம் கட்டாயமாக, இந்த சவாலை கடந்து வெளி வர வேண்டும். கூட்டமாக சேரக் கூடாது. ஒருவருக்கொருவர் இடைவெளி வைத்து கொள்ள வேண்டும். இந்த தமிழ் புத்தாண்டை முழு உற்சாகமாக, அன்பாக, ஆனந்தமாக கொண்டாட வேண்டும். அதேநேரத்தில், மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நம் தலைமுறைக்கே, பெரிய ஆபத்தாக வந்துள்ளது. பொறுப்பாக நடந்துகொண்டால், இந்த பேராபத்தில் இருந்து, நாம் வெற்றிகரமாக வெளி வர முடியும். இவ்வாறு, சத்குரு தெரிவித்துள்ளார்.