கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி சத்ரு சம்ஹார யாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2026 11:09
கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை வேண்டி சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது.
சண்முக சுப்ரமணிய சுவாமி சன்னதியில் காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பத்துடன் யாகம் துவங்கியது. 9:30க்கு புண்யாக வாசம், கலச பூஜைகள், 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 10:00 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. 10:30க்கு சண்முகார்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் துவங்கியது. 12 சிவாச்சாரியார்களை கொண்டு ஆறு வகையான பூக்கள், திரவியங்களை கொண்டு யாகம் நடைபெற்று வருகிறது. 11:30க்கு மகா தீபாராதனை, 12:00க்கு பிரசாதம், 12:30க்கு அன்னதானம் வழங்கலும் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் பிபின், ராஜ்குமார்ஷா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.