பதிவு செய்த நாள்
14
ஏப்
2020
02:04
* தினமும் காலையும் மாலையும் விளக்கு ஏற்றுங்கள். கிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும். பிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி ஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும். செல்வம் பெருகும்.
* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்பாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் குலதெய்வ ஆசி கிடைக்கும். புதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத் திரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.
பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.
* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
* இந்த புத்தாண்டில் புதுமணத் தம்பதியரை விருந்து அழைக்க திங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.
* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா? ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள். அன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக அமையுமானால் இன்னும் சிறப்பு.
* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம், பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் குடும்பத்தில் திருமணமா.... திருமாங்கல்யம் வாங்க அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.