திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 108 திவ்யதேசங்களில் முதன்மையானது எனவும், பூலோக வைகுண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் நடக்கும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகளவில் பிரசித்த பெற்றது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிச., 19ம் தேதி, இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்குகிறது. டிச., 20ம் தேதி பகல் பத்து துவங்குகிறது. 29ம் தேதி மோகினி அலங்காரமும், 30ம் தேதி இராப்பத்தும் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு டிச., 30ம் தேதி, அதிகாலை, 5.45 மணிக்கு நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். 2026 ஜன., 5ம் தேதி திருக்கைத்தல சேவை, டிச., 6ம் தேதி திருமங்கமைன்னன் வேடுபறி, டிச., 8ம் தீர்த்தவாரியும் நடக்கிறது. டிச., 9ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.