பதிவு செய்த நாள்
20
மே
2020
12:05
திருவாலங்காடு : தனியார் அமைப்பின் சார்பில், கிராம கோவில் குளங்கள், துார் வாரும் பணி துவங்கி உள்ளது. சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் அங்கமான, ஓராசிரியர் பள்ளிகள் சார்பில், மாலை நேர இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தற்போது, இந்த தனியார் அமைப்பு, கிராமங்களில் கோவில் குளங்களை துார் வாரி சீரமைக்கும் பணிகளை துவக்கி உள்ளது. அந்த வகையில், திருவாலங்காடு ஒன்றியம், வேணுகோபாலபுரம் கிராமத்தில் உள்ள கோவில் மற்றும் விவசாய குளம் ஆகியவை, தற்போது, 3.85 லட்சம் ரூபாய் மதிப்பில், துார் வாரும் பணி துவங்கி உள்ளது. குளத்தில், ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.