கொரோனா ஒழிய கோவிலை திறங்க.. கோவில்பட்டியில் நூதன போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2020 12:05
கோவில்பட்டி: கொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் நூதன போராட்டம் நடத்தினார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவில்களில் தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் தூத்துக்குடி, கோவில்பட்டியில் வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். கோவில்களை திறந்தால்தான் கொரோனா தொற்று அழியும், எனவே மத்திய மாநில அரசுகள் கோவில்களை திறந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினர். கையில் தேங்காய், பழம், பூ அடங்கிய தாம்பூல தட்டினை ஏந்தி சூடம், பத்தி ஆகியவற்றை வைத்து கோவிலை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.