சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 அன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்தவொரு வழிபாட்டு தலமும் திறக்கப்படவில்லை. இருந்தாலும், ரம்ஜான் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இஸ்லாமிய மக்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில் ரம்ஜான் அன்று மசூதிகள் திறக்கப்படாது என்றும், மே 31-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.