திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, தொண்டி இரட்டைபிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர் போன்ற அபிஷேகமும், தீபராதனையும் நடந்தது.* ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.