நிகழ்காலத்தில் மட்டும் வாழப் பழகுங்கள் என நமக்கு வழிகாட்டுகிறார்கள் மகான்கள். எதை இழந்தாலும் பரவாயில்லை, நம்பிக்கையை மட்டும் இழப்பது கூடாது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை மறவாதீர்கள். சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட்டு வாருங்கள். குறுக்கிடும் தடைகளைப் போக்கி உங்கள் பிள்ளைகளை வழிநடத்தும் பொறுப்பை கணபதி கவனித்துக் கொள்வார்.