உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்காபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2025 11:11
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, அபிஷேகம் செய்யப்பட்ட 108 சங்குகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற சிறப்பு தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.