கேரளா பாதிரியார்கள் தமிழக தேவாலயங்களில் பொறுப்பேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2020 01:06
பந்தலூர்: கேரள மாநிலம் மானந்தவாடி பகுதியிலிருந்து தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதி தேவாலயங்களில் பாதிரியார்கள் பொறுப்பேற்று வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக எல்லையான பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் கேரள மாநிலம் வயநாடு மறை மாவட்டத்தைச் சேர்ந்த தேவாலயங்கள் செயல்பட்டு வருகிறது.இங்கு மலையாள மொழி பேசும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் பொறுப்பேற்று தேவாலயங்களை நிர்வகித்து வருகின்றனர். தற்போது கேரள மாநிலம் வயநாடு மற்றும் தமிழகத்திற்குட்பட்ட நீலகிரிப் பகுதியிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், கேரளாவில் இருந்து யாரும் தமிழகத்திற்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட எல்லையான பாட்டவயல் அறிவு கோட்பாடு புனித மேரி தேவாலயத்தில் வயநாடு மாவட்டம் மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாதர் அலெக்ஸ் என்பவர் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வந்து பொறுப்பேற்றுள்ளார். மேலும் அவர் வந்தவுடன் வழிபாட்டு கூட்டங்களையும் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று மதியம் 11 மணிக்கு தேவாலயத்தில் வழிபாட்டுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் அப்போது சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதே போல் 28ம் தேதி மேலும் ஆறு பாதிரியார்கள் கேரள மாநிலத்திலிருந்து தமிழக எல்லைக்கு உட்பட்ட தேவாலயங்களில் பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கேரள மாநிலத்திலிருந்து பாதிரியார்கள் தமிழகத்தில் பணியாற்ற எதனடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களில் தேவாலயங்கள் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.