பதிவு செய்த நாள்
27
ஜூன்
2020
10:06
திருப்பதி; திருமலை ஏழுமலையானின் நேரடி தரிசன டோக்கன் எண்ணிக்கை, அதிகரிக்கப்பட்டு உள்ளது.திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு, ஜூன், 11 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
முதலில், ஒரு மணி நேரத்திற்கு, 500 பேர் என, ஒரு நாளைக்கு, 6,௦௦௦ பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் மூலம், 6,௦௦௦ டிக்கெட்களும், நேரடி தரிசன டோக்கன் முறைப்படி, 6,௦௦௦ டிக்கெட்களும் வழங்கப்படுகின்றன. தவிர, ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள், 750 பேர் என, தினசரி, 12 ஆயிரத்து, 750 பேர், ஏழுமலையானை தரிசனம் செய்யும் வாய்ப்பை, தேவஸ்தானம் வழங்கி வருகிறது.நேற்று முன்தினம், பக்தர்களின் காணிக்கை, 88 லட்சம் ரூபாய் கிடைத்து உள்ளது. தற்போது, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஓரிரு நாட்களில் உண்டியல் வருவாய், 1 கோடி ரூபாயை எட்டும் என தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.