திருப்பூர், தாராபுரம் ரோடு தொங்குட்டிபாளையம் சுயம்பு காரண பெருமாள் கோவில் கொரோனா தொற்று காரணமாக பல நாட்களுக்கு பிறகு அரசு அறிவிப்பின் படி திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
ஊரடங்கு காரணமாக, மார்ச் 25 முதல், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன், கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. கிராமப்புறங்களில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் வரும், சிறிய திருக்கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், சர்ச்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தொங்குட்டிபாளையம் சுயம்பு காரண பெருமாள் கோவில் பல நாட்களுக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.