பதிவு செய்த நாள்
01
ஜூலை
2020
04:07
ஓசூர்: தளி அருகே, கொரோனா வைரஸ் ஒழியவும், மக்கள் நலமுடன் வாழவும், 200க்கும் மேற்பட்ட பெண்கள், வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில், அம்மனுக்கு அபி ?ஷகம் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மாருப்பள்ளியில், காளியம்மன் மற்றும் மாரியம்மன் என, கிராம தேவதை கோவில்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பலர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ மாருப்பள்ளி, தாசயனதொட்டி ஆகிய இரு கிராமங்களில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் என, 200க்கும் மேற்பட்டோர், மாருப்பள்ளி அருகே உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் வேப்பிலை, மஞ்சள் கலந்து, காளியம்மன், மாரியம்மன் கோவிலுக்கு நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு அம்மனுக்கு வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரால் அபி?ஷகம் செய்யப்பட்டது. ஊர்வலமாக சென்ற மக்கள், சமூக இடைவெளியை மட்டும் மறந்து விட்டனர்.