பதிவு செய்த நாள்
04
ஜூலை
2020
03:07
திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக, அகரத்தில் நடக்கும் அகழாய்வில், பண்டைய கால நீள மற்றும் உருண்டை வடிவிலான வண்ண பாசிகள், வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆறாம் கட்ட அகழாய்வு பணி, கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. இதுவரை நடந்த அகழாய்வில் வட்ட, உருண்டை வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது அகரத்தில், நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பாசிகள், செல்வந்தர்கள், வியாபாரிகள் தங்களது செல்வாக்கை காட்ட கழுத்தில் அணிந்திருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில், கீழடியில் இதுவரை கதிரேசன் நிலத்தில் இரண்டு ஏக்கரில் நடந்த அகழாய்வு பணியில், செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு.தரைதளம், இருவண்ண பானைகள், இணைப்பு குழாய் பானைகள், பானை ஓடுகள், சிறிய உலைகலன் கண்டறியப்பட்டன. அகழாய்வை மேலும் விரிவு படுத்தும் வகையில், சேதுராமு அம்மாள் என்பவரது நிலத்தில், தொல்லியல் துறை அகழாய்வை தொடங்கியுள்ளது. ஒரு ஏக்கரில் மூன்று குழிகள் முதல் கட்டமாக தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.