பதிவு செய்த நாள்
04
ஜூலை
2020
03:07
சென்னை; தமிழகத்தில், கோவில் காடுகள் பாதுகாப்பு குறித்த, ஆன்லைன் கருத்தரங்கில் பங்கேற்க, மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் துறை அழைப்பு விடுத்துள்ளது.ஊரடங்கு காரணமாக, மக்களை ஓரிடத்தில் வரவழைத்து, விழிப்புணர்வு கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியாது. அதே சமயத்தில், விழிப்புணர்வு பணிகளையும் கிடப்பில் போட முடியாது.அதனால், ஆன்லைன் முறையில் நிகழ்ச்சிகளை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடத்தி வருகிறது. இவ்வகையில், கோவில் காடுகள் பாதுகாப்புக்கான, ஆன்லைன் கருத்தரங்கை நடத்த, சுற்றுச்சூழல் துறை அழைப்பு விடுத்துள்ளது.வரும், 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு துவங்கும் கருத்தரங்கில், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பங்கேற்கலாம். இதற்கான தொழில்நுட்ப குறிப்புகள், சுற்றுச்சூழல் துறையின், www.environment.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.