பரமக்குடியில் ஆடி வெள்ளிகோபுர தரிசனம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2020 05:07
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடியாமல் பக்தர்கள் இன்றிகோயில் வெறிச்சோடியது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு வாய்ந்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலுக்கு, ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் பரமக்குடி மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் பாதயாத்திரையாகசென்று வழிபடுவது வழக்கம். கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கோயிலுக்குள் செல்லபக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, வழக்கமான பூஜை மட்டும்நடத்தப்படுகிறது.ஆடி வெள்ளிக்கிழமை இக்கோயிலில் பல ஆயிரம்பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபடும் நிலையில் தற்போதுதடை உள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டது. ஆடி திருக்கல்யாணதிருவிழாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.