பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
11:07
கோவை:கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விநாயகர் சதுர்த்தி விழாவை நம்பி, சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்திருக்கின்றனர். கொரோனா வைரசை அழித்து, அந்த கஜமுகன் தங்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில், நாட்களை நகர்த்துகின்றனர்.கொரோனா ஊரடங்கால், அதிக மக்கள் கூடி கொண்டாடும், எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை.
இந்நிலையில் வரும் ஆக., 22ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. கோவையில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், இவ்விழாவில் ஆண்டுதோறும், 3000க்கும் அதிகமான விநாயகர் சிலைகளை, ஊர்வலமாக எடுத்து சென்று, குளங்களில் விசர்ஜனம் செய்வது வழக்கம். களிமண்ணில் விநாயகர் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் தயாரித்து விற்கும், களிமண் சிற்ப கலைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழா நடக்குமா என்ற சந்தேகத்தில், கவலையில் உள்ளனர். கோவை சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள, ராஜவள்ளி சண்முகம் ஆர்ட்ஸ் களிமண் சிற்ப கலைஞர் சரவணக்குமார் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்தி கொலு ஆகிய மூன்று பண்டிகைகளை நம்பித்தான், இந்த தொழிலை செய்து வருகிறோம். முக்கியமாக விநாயகர் சதுர்த்தி விழாவில் வரும் வருமானத்தை வைத்துதான், ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்துகிறோம். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும், இங்கிருந்துதான் சிலைகள் செய்து அனுப்புகிறோம். எங்களுக்கு மட்டுமே, 400 சிலைகளுக்கு மேல் ஆர்டர்கள் கிடைக்கும். வீட்டில் வைத்து பூஜை செய்யும் சிறிய விநாயகர் சிலைகள், 3000க்கும் மேல் விற்பனையாகி விடும்.இந்த ஆண்டு இன்னும், சிலை தயாரிக்க ஒரு ஆர்டரும் வரவில்லை. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரி கொலு பொம்மைகள் மட்டும்தான், இப்போது செய்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவில்லை என்றால், எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். வைரசை அழித்து அந்த விநாயக பெருமான், எங்களை காப்பற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, உருக்கமாக கூறி முடித்தார் சரவணக்குமார்.விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவில்லை என்றால், எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். வைரசை அழித்து அந்த விநாயக பெருமான், எங்களை காப்பற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.