பதிவு செய்த நாள்
24
ஜூலை
2020
01:07
கோவை:பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க வேண்டும், என, காமாட்சிபுரம் ஆதினம் தெரிவித்தார்.கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதில், முருக வழிபாடு மிக முக்கியமானது.
மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் மேலை நாடுகளில் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல்தான் வைத்து பூஜை செய்யப்படுகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் பாடியுள்ளனர்.கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் அருளப்பட்டது. கவசம் என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் காக்க கடவுளை பிரார்த்திப்பதாகும். கந்தர் சஷ்டி கவசத்தை இழிவுபடுத்துவதை, காவடிக்குழு பக்தர்கள், இனி பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் ஆக.,9ம் தேதி சஷ்டி அன்று முருக பக்தர்கள், காவடிக்குழுவினர் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசத்தோடு, கந்தர்சஷ்டி கவசத்தையும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்.அதேபோல், பங்குனி உத்திரம், தை பூசத்துக்கு திடும்பு இசை வைத்திருப்பவர்கள் சஷ்டி அன்றும் இசை வாசித்து முருகன் அருளால் தீயவர்களுக்கு நல்ல புத்தி வர பிரார்த்தனை செய்வோம், என்றார்.