காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மிக விமர்ச்சையாக நடைபொறும். இந்தாண்டு கொரோனா தொற்றால் கோவில்களில் பக்தர்கள் குறைவாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மிக விமர்சியாக ஆடி மாதத்தில் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெறும். இந்த ஆண்டு ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் இன்றி மிக எளிமையான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவர் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அலங்காரத்தில் ஆண்டாள் காட்சியளித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நித்திய கல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.