இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது. எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.