பதிவு செய்த நாள்
01
ஆக
2020
08:08
ராமநாதபுரம்: ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு,ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம்,வழிபாடு நடந்தது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, ராமநாதபுரத்தில்சுமங்கலிப் பெண்கள் வீட்டில் லட்சுமிதேவியை பூஜைசெய்து, மாங்கல்யம் மாற்றி, கையில் காப்புக்கட்டினர். ஆடி வெள்ளியை முன்னிட்டு, பெண்கள் நெய், எலுமிச்சை தீபமேற்றியும், சிலர் கூழ்காய்ச்சியும், அபிேஷகம் செய்து வழிபட்டனர். சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன்கோயில், முகவை ஊரணி ராஜகாளியம்மன்கோயில், அல்லி கண்மாய் ராஜமாரியம்மன் கோயில், வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், பரமேஸ்வரி அம்மன்கோயில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை நடந்தது.பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில், சின்னக்கடைத் தெரு துர்க்கையம்மன், நயினார் கோவில் சவுந்தர்யநாயகிஎன அனைத்து கோயில்களிலும் சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டிருந்தது.